ஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் – பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு குறித்த ஆவணங்களை ஒரு வாரத்தில் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு பொன்மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்மாணிக்கவேல் பதவிக்காலம் நிறைவடைந்து விட்டதால் வழக்கு ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

 

அதன்படி அவர் ஆவணங்களை அளிக்காததால் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. வழக்கு நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது .அப்போது ஆவணங்களை தந்து விடுவதாக கூறிய பிறகும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதாக பொன்மாணிக்கவேல் தரப்பில் முறையிடப்பட்டது.

 

ஓய்வுபெற்ற அதிகாரி அரசு ஆவணங்களை ஒருநாள் வைத்திருப்பது கூட சட்டவிரோதம் என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து பொன்மாணிக்கவேல் ஒரு வாரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு அது குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.


Leave a Reply