வெங்காயம் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

வட மாநிலங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் வெங்காய விளைச்சல் கடும் சரிவு ஏற்பட்டது விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக வெயிலில் கருகியும், மழை வெள்ளத்தில் மூழ்கியும் வெங்காய உற்பத்தி சரிவு ஏற்பட்டதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

 

தமிழகத்தை பொறுத்தவரையில் செப்டம்பர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை பெருக்கம் உள்ளிட்ட காரணங்களினால் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி குறைந்ததும் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

 

வெங்காயத்தை சேமித்து வைக்க முறையான சேமிப்பு கிடங்குகள் இல்லாத காரணத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் அழுகிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது தட்டுப்பாட்டிற்கு காரணமாக கூறப்படுகிறது. மரபணு மாற்றப்பட்ட ஒட்டுரக வெங்காயம் எளிதில் அழுகி போவதால் வெங்காயம் இருப்பு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மரபணு மாற்றப்பட்ட ஒட்டுரக வெங்காயம் பயிரிடப்படுவதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள். மரபணு மாற்றப்பட்ட வெங்காயத்தினால் சிறிய மழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.


Leave a Reply