--- --:--:-- --

டிக்டாக் மூலம் பழகி நர்சிங் மாணவியை கடத்திச் சென்ற இளைஞர் கைது

6

சேலத்தில் டிக் டாக் மூலம் பழகி நர்சிங் மாணவியை கடத்தி சென்ற இளைஞர் கைதான நிலையில் இது தொடர்பான விசாரணைக்கு பயந்து இளைஞர் நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். பனைமரத்துப்பட்டி அடுத்த தீபம் பட்டியை சேர்ந்தவர் கிருபாகரன்.

 

திருமணமாகி மனைவியை பிரிந்த இவர் டிக் டாக் மீது அதிக நாட்டம் கொண்டவர் டிக்டாக்கில் விதவிதமான வீடியோக்களை பதிவிட்டு சேலத்தில் நர்சிங் படித்து வரும் சென்னையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவரை மயக்கினார். அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி புதுச்சேரிக்கு கடந்த வாரம் அழைத்து சென்றுள்ளார்.

 

கிருபாகரன் செல்போன் எண்ணை ட்ராக் செய்த போலீசார் புதுச்சேரிக்கு சென்று மாணவியை மீட்டனர் .கிருபாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கிடையே கிருபாகரன் நண்பரான சதீஷ்குமார் என்ற இளைஞரை போலீசார் விசாரித்தனர். மறுநாள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon