நித்தியானந்தா போல தனித்தீவு வாங்கினால் மட்டுமே ஸ்டாலினால் சி.எம்.ஆக முடியும்..! அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!!

மு.க.ஸ்டாலினால் தமிழக முதல்வராவது ஒரு போதும் நடக்காது. சாமியார் நித்தியானந்தா தனித் தீவை வாங்கி பிரதமராக அறிவித்துக் கொண்டது போல், மு.க.ஸ்டாலினும் தனித் தீவு வாங்கி தம்மை சி.எம்.ஆக அறிவித்துக் கொள்ளலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

 

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் மாறி மாறி பேசி வருகிறார். 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றார் மு.க.ஸ்டாலின் . தேர்தலை சந்திக்கத் தயார் என்றும் தெரிவிக்கிறார்.அவரே இப்போது தேர்தலை குறை கூறி மீண்டும் வழக்கும் தொடர்கிறார். அது வேற வாய்; இது வேற வாய் என்பது போல மு.க.ஸ்டாலின் மாறிப் மாறி பேசி வருகிறார்.

தமிழக முதல்வராவோம் என்ற மு.க.ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. தனித் தீவை வாங்கி, தனிநாடு அறிவித்து, அதற்கு நானே பிரதமர் என சாமியார் நித்தியானந்தா போல, மு.க.ஸ்டாலினும் ஒரு தனித்தீவை வாங்கி தம்மை சி.எம்.ஆக அறிவித்துக் கொண்டால் மட்டுமே சாத்தியம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply