ஓமலூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் அளவுக்கு குறைத்து ஏமாற்றியதால் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த பங்கில் பெட்ரோல் போட்டால் அதிக அளவு மைலேஜ் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இந்த நிலையில் அந்த பங்க் பெட்ரோலின் அளவை குறைத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக தகவல் பரவியது. இதை சோதிக்க சிலர் பாட்டில்களை கொண்டு சென்று அதில் பெட்ரோல் நிரப்பு மாறு கூறினார்.
அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் முன்னிலையில் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிய போது ஒரு லிட்டருக்கு பதில் 750 மில்லி லிட்டர் பெட்ரோல் மட்டுமே வந்தது.
இதன் மூலம் மோசடி பெட்ரோல் பங்கின் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் அங்கு குவிந்த பொதுமக்கள் மோசடி செய்யும் பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.