--- --:--:-- --

பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம்

10

பொறியியல் படித்து பிஎட் படித்தவர்கள் இனி டெட் தேர்வு எழுதுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

பி‌இ படிப்பில் எந்த பிரிவை எடுத்திருந்தாலும் பிஎட் முடித்த பிறகு ஆறு முதல் எட்டாம் வகுப்பிற்கு கணித ஆசிரியராக தகுதி பெறுவார்கள் என்று தமிழக அரசின் சமநிலை அந்தஸ்து வழங்கும் குழு அறிவித்துள்ளது. கலை அறிவியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே பி.எட் படிக்கலாம் என்ற நிலையை மாற்றி 2015 – 2016 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் மாணவர்களும் பிஎட் படிக்க அனுமதி வழங்கப்பட்டது.

 

ஆனால் டெட் தேர்வு எழுத தகுதி இல்லை என தெரிவிக்கப்பட்டதால் பி‌இ படித்து பிஎட் முடித்தவர்கள் ஆசிரியராக முடியாத சூழல் இருந்தது. இதனால் பிஎட் படிக்க அனுமதி இருந்தும் பொறியியல் மாணவர்கள் பிஎட் படிப்பில் சேராமல் இருந்தனர். தற்போது பட்டதாரி ஆசிரியர் ஆகலாம் என சமநிலை குழு அரசாணை வெளியிட்டு இருப்பதால் டெட் தேர்வு எழுத தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon