தமிழக வனத்துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை!

கோவையை சேர்ந்த திருநங்கை ஒருவர் தமிழக வனத் துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார். திருநங்கை ஒருவர் அரசு பணிக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதனை முறியடித்து வனத்துறை பணியில் தடம் பதித்திருக்கிறார் கோவை மாவட்டம் கண்ணார் பாளையத்தை சேர்ந்த தீப்தி.

 

இந்த பணி தமக்கு எளிமையாக கிடைக்கவில்லை எனக் கூறும் தீப்தி தமது தாயும் , சக திருநங்கைகளும் காரணமாக இருந்ததாகவும் நன்றி கூறுகிறார். 18 வயதில் சுதன் ராஜ் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டவர். பள்ளிகல்வி முடிந்து கல்லூரி சேர்ந்த போது உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் தன்னை திருநங்கையாக உணர்ந்து இருக்கிறார்.

 

ஆனால் தாயார் எதிர்ப்பு தெரிவிக்க வீட்டை விட்டு வெளியேறிய சுதன் ராஜ் பெயரை தீப்தி என மாற்றி அடைக்கலம் கொடுத்து இருக்கிறார்கள் கோவையை சேர்ந்த திருநங்கைகள். தொடர்ந்து சக திருநங்கைகள் அளித்த ஊக்கத்தால் கல்லூரிப்படிப்பை மீண்டும் தொடர்ந்து நிறைவு செய்திருக்கிறார்.

 

இதனை தொடர்ந்து பணியில் இருக்கும் போது உயிரிழந்த அவரது தந்தையின் பணியை வாரிசு அடிப்படையில்தீப்திக்கு வழங்கியிருக்கிறது தமிழக வனத்துறை. இந்த சந்தோஷமான தருணத்தில் வாய்ப்பாக தாயையும் சகோதரர்களையும் விட்டு பிரிந்து வாழ்ந்து தீப்தி தற்போது மீண்டும் குடும்பத்தோடு இணைந்திருக்கிறார்.

 

குடும்பத்தை விட்டு பிரிந்தாலும் தமது நோக்கத்தில் தெளிவாக இருந்த தீப்தி மன உறுதி மற்றும் தன்னம்பிக்கை காரணமாக இந்த இடத்தை அடைந்திருப்பதாக சக திருநங்கை ரஷ்யா தெரிவிக்கிறார். சாதிக்க நினைத்தால் எதுவுமே தடையில்லை என்பதை விடாமுயற்சியால் நிரூபித்து தமிழக வனத்துறையில் முதல் திருநங்கையாக கால்பதித்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply