நடுரோட்டில் அரிவாளை வீசி மிரட்டிய நபர்.. அலறிய பொதுமக்கள்.. சிசிடிவி காட்சி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு பொது மக்களை மிரட்டிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மதுபோதையில் ஒரு நபர் அந்த வழியாக சென்ற பேருந்துகளை வழிமறித்து அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டி இருக்கிறார். இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

 

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போதை ஆசாமியின் உறவினர்கள் சிலர் அந்த நபரை அழைத்து சென்றதாக தெரிகிறது. இதனை அந்த சாலையில் இருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போதை ஆசாமி தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply