சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களை என்கவுன்டர் செய்வதில் தவறு இல்லை

கொடுஞ்செயல் குற்றவாளிகள் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களை என்கவுன்டர் செய்வது தவறு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

சென்னை தொட்டி மார்க்கத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டார்.

 

இது போன்ற செயல்களால் மட்டுமே குற்றங்கள் தடுக்கப்படும் என கூறிய அமைச்சர் ஜெயக்குமார் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களை என்கவுண்டர் செய்வதில் தவறில்லை என்றார். உள்ளாட்சி தேர்தல் சந்திக்க தைரியமில்லாமல் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சிரித்துக்கொண்டே அழுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.


Leave a Reply