முகம் தெரியாதவர்களிடம் தனிப்பட்ட விபரங்களை பகிரக்கூடாது

முகம் தெரியாதவர்களிடம் தனிப்பட்ட விபரங்களை பகிரக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஏ‌கே விசுவநாதன் நாட்டிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

 

பெண்களின் பாதுகாப்புக்காக காவலன் செயலி உருவாக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர் இதனை மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் முகம் தெரியாதவர்களுடன் தனிப்பட்ட விபரங்களை பகிர கூடாது என்றும் மாநகர காவல் ஆணையர் ஏ‌கே விஸ்வநாதன் அறிவுறுத்தினார்.

 

சென்னையில் கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காவலன் செயலியை காவல்துறையினர் அறிமுகம் செய்து வைத்தனர். கல்லூரி மாணவிகள், பெண்கள், முதியோர்கள் பாதுகாப்பு குறித்தும் அதனை தடுக்கும் வகையில் காவலன் எஸ் ஓ எஸ் செயலியை காவல்துறை உருவாக்கியுள்ளது.

 

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதுவண்ணாரப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவல் துணை ஆணையர் சுபலட்சுமி பங்கேற்று செயலியை அறிமுகம் செய்து வைத்தார். அந்த செயலியை பயன்படுத்துவது குறித்து மாணவிகளுக்கு அவர் எடுத்துரைத்தார்.

 

இதனையடுத்து மாணவிகளிடையே பேசிய துணை ஆணையர் சுபலட்சுமி அவசர காலத்திலும் அசம்பாவிதம் ஏற்படக்கூடிய சமயங்களிலும் காவலன் செயலியைப் பயன்படுத்த வேண்டுமெனவும் இதன் மூலம் 5 நிமிடங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றடையும் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply