ஹைதராபாத் என்கவுண்டரை போன்றே தன்னுடைய மகளை கொன்றவர்களும் கொல்லப்பட வேண்டுமென உன்னாவ் பெண்ணின் தந்தை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் ஜாமினில் வெளியே வந்த பின்னர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்கள். டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமக்கு பணமோ வேறு ஏதேனும் உதவியும் தேவையில்லை என உன்னாவ் பெண்ணின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மகளை கொன்றவர்கள் ஹைதராபாத்தில் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டது போல சுட்டு வீழ்த்தப்பட்ட வேண்டும் அல்லது தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும் என உன்னாவ் பெண்ணின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
உன்னாவ் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க கோரி உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் ஜாமினில் வெளியே வந்த போது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தி சமாஜவாதி கட்சி தலைவரும் உத்தரபிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் லக்னோவில் உள்ள சட்ட பிரிவுகளாக முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் உன்னாவ் பெண் எரிக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது என்றும் இது கருப்பு நாள் என்றும் தெரிவித்தார்.