நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க ஓடிச்சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க ஓடி சென்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. டெல்லியில் காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

 

இது முடிந்ததும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர்கள் புறப்பட்டு சென்றனர். ஆனால் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தை அடைவதற்கு தாமதமானது.

 

கேள்வி நேரம் தொடங்குவதற்குள் அவைக்குள் இருக்க வேண்டும் என்பதால் அவசர அவசரமாக நாடாளுமன்றத்திற்கு ஓடி சென்றார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

 

அவரது கடமை உணர்வை பாராட்டி பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Leave a Reply