4 குற்றவாளிகளை என்கவுன்ட்டரில் போலீசார் சுட்டுக்கொன்றதற்கு திரையுலக பிரபலங்கள் வரவேற்பு

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 குற்றவாளிகளை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றதற்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வரவேற்பு தந்துள்ளனர்.

 

நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பயம் திறந்த தீர்வு என்றும், சில சமயங்களில் பயம் மட்டுமே தீர்வு என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகர் விஷால் கடைசியில் நீதி காப்பாற்றப்பட்டு விட்டதாகவும், தெலுங்கானா போலீசாருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம் வரவேற்கத்தக்கது என்றும், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கான நியாயமான தண்டனையாகவே நான் இதைப் பார்க்கிறேன் என்றும்,இது போன்று தவறு செய்யும் நபர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றும் தெரிவித்துள்ளார்.

 

நடிகை ராகுல் பிரீத் சிங், இதுபோன்ற ஒரு குற்றத்தை செய்து விட்டு எவ்வளவு தூரம் உங்களால் ஓடிவிட முடியும் என்றும் தெலுங்கானா போலீசாருக்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். இதேபோல நடிகை ஹன்சிகா, நடிகர்கள் ஜெயம் ரவி, நாகர்ஜுனா ஆகியோர் நீதி காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்றும் தெலுங்கானா போலீசாருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply