சென்னை பெரவள்ளூர் பகுதியில் முன்விரோதத்தில் இளைஞர் ஒருவரை ஓட ஓட வெட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பலூரில் சந்தோஷ்குமார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
தனது நண்பர்களுடன் யோகேஸ்வரன் பேசிக் கொண்டிருந்தபோது அவரை தாக்குவதற்காக சந்தோஷ் தனது நண்பர்களுடன் சென்று உள்ளார். இவர்கள் வருவதைப் பார்த்து அச்சமடைந்த யோகேஸ்வரன் அங்கிருந்த கடைக்குள் ஓடியுள்ளார்.
பின்னர் அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் கடைக்குள் சென்று அவரை கடுமையாக தாக்கியது. இதில் வெட்டுக்காயம் அடைந்த யோகேஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தப்பியோடிய சந்தோஷ் உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.