--- --:--:-- --

போக்சோ குற்றவாளிகள் கருணை மனு தர அனுமதிக்கக் கூடாது

12

பெண்கள் மீது நடைபெறும் அரக்கத்தனமான குற்றங்களால் நாட்டின் மனசாட்சியே ஒதுக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேதனை தெரிவித்துள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கருணை மனு அளிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 

ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டில் பெண்கள் மீதான கொடூர தாக்குதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் பெண்கள் மீதான கொடூரங்கள் தொடர்வதாகவும் கூறியுள்ளார்.

 

பெண்கள் பாதுகாப்பு மிக முக்கிய பிரச்சனையாக உள்ளதாக தெரிவித்த ராம்நாத் கோவிந்த் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு மரண தண்டனை பெற்றவர்கள் கருணை மனு அனுப்புவதை தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமெனவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon