ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை !

ராஜஸ்தானி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் சிவா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் தீவாராம் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

 

சுமார் 15 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வந்தது. சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே குழி தோண்டப்பட்டது. சுமார் 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார்.

 

முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Leave a Reply