ரூ.15 லட்சம் கடன் கொடுத்த சினிமா உதவி இயக்குனர் தற்கொலை

சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் தற்கொலை செய்து கொள்ளும் முன் வீடியோ வெளியிட்டு சினிமா உதவி இயக்குனர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருமுல்லைவாயில் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. சினிமாவில் உதவி கலை இயக்குனராக இவர் சரியான வேலை இல்லாததால் அதே பகுதியில் உள்ள உணவகத்தில் கேசியராக பணியாற்றி வந்தார்.

 

சினிமாவில் சம்பாதித்த 15 லட்சம் ரூபாய் பணத்தை உணவக உரிமையாளர் குமார் என்பவருக்கு செல்லதுரை கடனாக வழங்கியுள்ளார். ஆனால் பணத்தை பலமுறை திரும்ப கேட்டும் குமார் திருப்பி தராததால் சில நாட்களாகவே செல்லதுரை மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் தற்கொலைக்கான காரணத்தை இரண்டரை நிமிட வீடியோவாக பதிவு செய்து தங்கையின் கணவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் 7 பக்க டைரி குறிப்பு எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Leave a Reply