மணல் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரியிலிருந்து டீசல் திருடும் சிசிடிவி காட்சி வெளியானதை தொடர்ந்து திருக்கழுகுன்றம் போலீஸ் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் மணல் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த லாரிகள் பேட்டரி மற்றும் டீசல் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யில் பார்த்த போது அதில் போலீஸ் இளைஞர் ஒருவரின் உதவியுடன் பேட்டரி மற்றும் டீசலை மப்டி உடையில் இருக்கும் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் திருடி காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் கார்த்திகேயனை ஆயுதப்படைக்கு மாற்றி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.