பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது – தமிழ்நாடு பெட்ரோலிய சங்கம் அறிவுறுத்தல்

பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என பங்க் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

 

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என பங்குகளில் அறிவிப்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை மீறி விற்பனை செய்யும் டீலர்களுக்கு தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் பொறுப்பு ஏற்காது என்றும் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply