--- --:--:-- --

மீண்டும் நடிகர் ரஜினிகாந்துடன் இணையும் நடிகை மீனா

13

சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகை மீனா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1984 ஆம் ஆண்டு வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியாக நடித்து அசத்தியிருப்பார் நடிகை மீனா.

 

அந்த பாடல் காட்சியில் தேவதை உடை அணிந்த மீனா சிரிக்கும் காட்சிகள் நம் நினைவுக்கு வரும். இதன்பின்னர் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து மீனா நடித்த எஜமான் திரைப்படமும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

 

ரஜினிகாந்த் மீனா நடித்த திரைப்படங்கள் வீரா,முத்து,எஜமான் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில் முத்து திரைப்படம் ஜப்பானில் பெரும் வெற்றியை ஈட்டியது. திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த நடிகை மீனா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 என்ற திரைப்படத்தில் நடிக்க நடிகை மீனா ஒப்பந்தமாகியிருக்கிறார். புதிய படத்தில் நடிகை மீனாவுக்கு எந்த கதாபாத்திரம் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

படத்தின் பூஜை இரண்டு வாரங்களில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஒப்பந்தமாகி இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon