டிசம்பர் 26 இல் நிகழும் சூரிய கிரகணம்

தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டுமே தெரிய இருக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் வரும் 26-ஆம் தேதி நிகழவுள்ளது. இதனை காண கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சில மணிநேரங்கள் சந்திரன் சூரியனை மறைத்து கடந்து செல்லும் நிகழ்வு சூரிய கிரகணம் எனப்படுகிறது. இதில் சந்திரன் முழுவதுமாக சூரியனை மறைத்து சென்றால் அது முழு சூரிய கிரகணம் என்றும், சூரியனின் உள் வட்டத்திற்குள் ஊடுருவிச் என்றால் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

அவ்வாறான நெருப்பு வளைய சூரியகிரகணமே கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான 26ம் தேதி நிகழவுள்ளது. இது தென் தமிழகத்தில் கோவை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டுமே முழுமையாக தென்படும்.

 

இந்த நெருப்பு வளையம் சூரிய கிரகணமானது டிசம்பர் 26ஆம் தேதி காலை 8 மணி 36 நிமிடத்தில் தொடங்கி, 11 மணி 12 நிமிடங்களுக்கு நிறைவு பெறுகிறது. ஒன்பது மணி 33 நிமிடத்திற்கு கிரகணம் உச்சநிலையை அடையும் என வானியற்பியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்றும், பிரத்தியேகமான சூரியக் கண்ணாடி வழியாகவே பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் இந்த அதிசயத்தை கிரகணத்தை மீண்டும் காண 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 

நெருப்பு பழைய சூரிய கிரகணத்தை காண கொடைக்கானல் வானியற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் 10 ரூபாய் செலுத்தி சூரிய கண்ணாடியையும் அங்கு பெற்றுக் கொள்ளலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


Leave a Reply