--- --:--:-- --

கஞ்சா விற்பனை : ஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யாவின் தாய், பாட்டி கைது!!

fh

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவின் தாயும், பாட்டியும் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்,

 

உடுமலையைச் சேர்ந்த சங்கர் என்ற இளைஞரும், திண்டுக்கல் மாவட்டம் பழனி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கவுசல்யா என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். வேறு, வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதலுக்கு, கவுசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, அதையும் மீறி இருவரும் திருமணம் செய்தனர். உடும்லைப்பேட்டையில் இருவரும் வசித்து வந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு, கவுசல்யாவின் குடும்பத்தினரால் ஏவிவிடப்பட்ட கூலிப்படையினரால், சங்கர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூர தாக்குதலில் கவுசல்யாவும் படுகாயமடைந்தார்.

 

பட்டப்பகலில், உடுமலைப்பேட்டை நகரின் பரபரப்பான கடை வீதியில் நடுரோட்டில் நடத்தப்பட்ட இந்த ஆணவக்கொலை தமிழகத்தையே உலுக்கியது.இந்தக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காதல் கணவரை இழந்த கவுசல்யா, கணவரின் இல்லத்திலேயே வசித்து வந்தார். அவருக்கு கருணை காட்டும் வகையில் அரசுப் பணி வழங்கப்பட்டது.கடந்த ஜனவரி மாதம் கோவையைச் சேர்ந்த பறை இசைக் கலை பயிற்சி பொறுப்பாளர் சக்தி என்பவரை கவுசல்யா திருமணம் செய்து கொண்டார்.

 

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகிலுள்ள குப்பம்பாளையம் என்ற இடத்தில் வசித்து வரும் கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, பாட்டி கோதையம்மாள் ஆகிய இருவரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.750 கிராம் கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இருவரும் பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon