நோயாளியை ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்ல லஞ்சம்.!

ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்ல லஞ்சம் கேட்பதாக கூறி நோயாளியை உறவினர்கள் ட்ரை சைக்கிளில் அழைத்து சென்று அவலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.

 

மதுரை இஸ்மாயில் புரத்தை சேர்ந்த மூதாட்டி சாயாரி மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் கடந்த 6 மாதமாக வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒவ்வொரு முறையும் அவரை சிகிச்சைக்காக ட்ரை சைக்கிளில் அவரது குடும்பத்தினர் அழைத்து வந்துள்ளனர்.

 

தமது தாயை ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்ட்ரெச்சரில் அழைத்துச்செல்ல மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக சாயாரியின் மகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அந்த மருத்துவமனை டீன் கவனத்திற்கு கொண்டு சென்றபோது சாயாரிஉள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

 

பின்னர் பேசிய அவர் நோயாளியை அவர்களது குடும்பத்தினர் தான் ட்ரை சைக்கிளில் அழைத்து வந்ததாகவும், லஞ்சம் கேட்பதாக அவர்கள் கூறும் புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


Leave a Reply