மழை நீர் வடிகால்களில் சாக்கடை கழிவுகளை திறந்து விட்டால் 1 லட்சம் ரூபாய் அபராதம்

சென்னையில் மழைநீர் வடிகாலில் சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

 

சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளுக்காக மோட்டார்வாகன இயக்கத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சென்னையில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.

 

மேலும் கழிவுகளை சுத்தம் செய்வதற்காக விரைவில் ஆறு அதிநவீன ரோபோக்கள் வரவழைக்கப்பட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இந்த மாதம் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாகவும் இதுவரை 100 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.


Leave a Reply