யோகிபாபுவுடன் திருமணமா – சபிதா ராய் விளக்கம்

யோகி பாபுவுக்கும், தமக்கும் திருமணம் என வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என நடிகை சபிதா ராய் தெரிவித்திருக்கிறார்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கும் சபிதா என்கிற நடிகைக்கும் திருமணம் என கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

 

இந்த நிலையில் தனக்கு திருமணம் என வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி மட்டுமே எனவும் திருமணம் நடக்கும் போது அதனை அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் எனவும் யோகிபாபு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து யோகிபாபுவை திருமணம் செய்து கொண்டதாக செல்லப்பட்ட நடிகை சபிதா ராய் ஒரு வீடியோ மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்.

 

அதில் ஒரு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வதந்தி பரப்பும் வகையில் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் யோகிபாபுவும் தாமும் நண்பர்கள் மட்டுமே எனவும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply