இன்று விண்ணில் ஏவப்படவள்ள கார்டோசாட்- 3 செயற்கைகோள்

பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் இன்று காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. பூமியிலிருந்து 509 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

 

அதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் எக்ஸெல் வகையில் 21வது ராக்கெட் ஆகும். சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும் எழுபத்தைந்தாவது ராக்கெட் இதுவாகும்.

 

மேலும் 2019 ஆம் ஆண்டில் இஸ்ரோ செலுத்தும் ஐந்தாவது ராக்கெட் இந்த பிஎஸ்எல்வி சி47. இந்தியாவின் கண்காணிப்பு செயற்கை கோளான கார்டோசாட் 3 மற்றும் அமெரிக்காவிலிருந்து வணிக ரீதியிலான 13 நானோ சேட்லைட்டுகளையும் சுமந்து செல்கிறது இந்த பிஎஸ்எல்வி சி-27.

 

கார்டோசாட்- 1மற்றும் 2 ஐ இந்தியா ஏற்கனவே செலுத்தி இருந்தாலும் கார்டோசாட்- 3 இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாக தெரிவித்திருக்கிறது இஸ்ரோ.

 

சுமார் ஆயிரத்து 625 கிலோ எடை கொண்ட கார்டோசாட்- 3 முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட செயற்கை கோள் ஆகும். இந்திய புவி கண்காணிப்பு செயற்கைகோள்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள கார்டோசாட் கார்டோசாட் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றை விட மிகவும் மேம்பட்ட ரிமோட் சென்சிங் திறனோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த செயற்கை கோளானது பரந்துவிரிந்த கண்காணிப்பு திறன் கொண்டதோடு சிறந்த தெளிவுத்திறன் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply