கடை திறப்பு விழாவில் ஸ்ருதிஹாசனுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்கள்!

சென்னை ஆவடியில் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஸ்ருதிஹாசனுடன் செல்பி எடுத்துக்கொள்ள ரசிகர்கள் அலை மோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதிய ராணுவ சாலையில் கட்டப்பட்டுள்ள பல்பொருள் அங்காடியின் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கடையில் கூடியிருந்தனர். அவர் சுருதிஹாசனுடன் செல்பி எடுத்துக்கொள்ள ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர்.


Leave a Reply