காதல் கணவனால் கர்ப்பமடைந்த கல்லூரி மாணவி! தலைமறைவான கணவன்!

தொழிலாளி ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவி ஒருவருடன் நெருங்கிப் பழகினார். ஆனால் தொழிலாளியின் வலையில் விழுந்த அந்த மாணவி, வாழ்க்கையை தொலைத்து வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

காதலித்து திருமணம் செய்து விட்டு சேர்ந்து வாழ மறுக்கும் கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி தான் இந்த இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கிருஷ்ணா ரெட்டியூரை சேர்ந்தவர் 30 வயதான துளசிமணி.

 

விசைத்தறி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி வனிதாவின்பக்கமும் அவரது பார்வை திரும்பியுள்ளது. அந்த மாணவியையும் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

 

இதனை நம்பிய அந்த மாணவியுடன் துளசிமணி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த மாணவி துளசிமணியிடம் கூறி தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

 

அதிர்ச்சியடைந்த துளசிமணி தமது மற்றொரு காதலி மூலமும், தமது அண்ணி மூலமும் வனிதாவுக்கு கருக்கலைப்புக்கு மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். வயிற்றில் இருக்கும் கருவை கலைத்து விடுமாறும், பின்னர் திருமணம் செய்து கொள்ளுமாறும் துளசிமணி உறுதியளித்துள்ளார்.

 

இதனை நம்பி வனிதாவும் மாத்திரைகளை சாப்பிட்டதால் வயிற்றில் இருந்த கரு கலைந்து உள்ளது. ஆனால் உறுதி அளித்தபடி திருமணம் செய்துகொள்ள துளசிமணி மறுத்ததால் வனிதாவின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

துளசிமணி அழைத்து போலீசார் எச்சரித்ததால் அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் பவானி பகுதியில் வீடு எடுத்து வனிதாவை தங்கவைத்த துளசிமணி அதன்பின்னர் தலைமறைவாகியுள்ளார். 50 நாட்களுக்கு மேலாக கணவன் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் தனிமையில் தவித்து வந்த வனிதா கிருஷ்ணா ரெட்டியூருக்கு சென்று கணவன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மகுடஞ்சாவடி போலீசார் துளசிமணி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து வனிதா போராட்டத்தை கைவிட்டு சென்றார்.


Leave a Reply