திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது கார் மோதிய விபத்தில் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அவிநாசி முத்தம்மாள் நகரை சேர்ந்த நந்தினி கடந்த 17ஆம் தேதி தனது ஒன்றரை வயது மகள் மற்றும் தனது உறவினரின் மகனையும் அழைத்துக்கொண்டு சூளை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது கடுமையாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்ட நந்தினியை மற்றும் குழந்தைகள் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். குழந்தைகள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் படுகாயமடைந்த நந்தினி மூளைச் சாவடைந்தார்.
இந்த நிலையில் நந்தினியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.