வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நவீன இயந்திரத்தை கண்டுபிடித்து கல்லூரி மாணவர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நவீன இயந்திரத்தை கண்டுபிடித்து கல்லூரி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் குழு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் விதமாக மேரிடைம் ரேஸ்கியூ போட் என்ற அதி நவீன இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.
பிவிசி பைப், பேட்டரி மற்றும் மின்னணு சாதனங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் 80 கிலோ எடை வரை மனிதர்களை தாங்கும் திறன் கொண்டது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இந்த இயந்திரம் கடல், ஆறு, ஏரி உள்ளிட்டவைகளில் சிக்கி தவிப்பவர்களை விரைந்து மீட்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த படைப்பானது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்றதோடு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




