நடிகர் ரஜினிகாந்த் உடன் மு.க அழகிரி இருப்பதுபோன்று மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் அமைச்சருமான மு.க அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார்.
அண்மையில் வெற்றிடம் குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்கு பதில் கூறிய மு.க அழகிரி வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் தான் நிரப்புவார் என்று கூறினார். இந்த நிலையில் மு.க அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் மதுரை மாநகரம் முழுவதும் விளம்பரப் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
ரஜினியுடன் மு.க.அழகிரி இருப்பது போலவும், ரஜினியை அரசியலுக்கு அழைப்பது போலவும் ஒட்டப்பட்டுள்ள இந்த விளம்பர போஸ்டர்கள் அரசியல் விமர்சகர்களை உற்று நோக்க வைத்திருக்கிறது.