--- --:--:-- --

சர்வதேச திரைப்பட விழா : நடிகர் மைக் மோகனிடம் 75 லட்சம் ரூபாய் வழங்கிய முதல்வர்

17

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதி உதவியை விழாக்குழுவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

 

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு திரைப்பட விழா வரும் டிசம்பர் 12 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய திரைப்பட சங்கம் இணைந்து நடத்தும் இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது, சிறந்த நடுவர்களுக்கான விருது என பல்வேறு விருதுகளும் வழங்கப்படும்.

 

55 நாடுகளை சேர்ந்த 150 படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவிற்கு ஆண்டுதோறும் தமிழக அரசு நிதி உதவி அளித்து வருகிறது. இந்த ஆண்டு விழா 75 லட்சம் ரூபாய் நிதியை விழாக் குழுவை சேர்ந்த நடிகர் மோகன், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon