உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐ‌என்‌எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 90 நாட்களுக்கு மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் பெற்ற போதிலும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

 

சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில், புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பு கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி நாளை அல்லது நாளை மறுநாள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.


Leave a Reply