காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல்!

காதல் திருமணம் செய்துகொண்ட இருவர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கரூர் மாவட்டம் வேலுச்சாமி புரத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவரின் மகள் ஸ்ருதியும் திண்டுக்கல், மாவட்டம் விஜயனும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்ருதியின் பெற்றோர் அவரை விஜயனிடம் இருந்து பிரித்து தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஓராண்டிற்கு மேலாக பெற்றோர் வீட்டில் இருந்த ஸ்ருதி 28 நாட்களுக்கு முன்பு தனது கணவருடன் வசித்து தொடங்கியுள்ளார்.

 

இதனையடுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், எனவே பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரியதாகவும் ஸ்ருதி தெரிவித்தார்.


Leave a Reply