ஆட்டம் போட்டு வந்த அரிசிராஜா சிக்கியது – மயக்க ஊசி போட்டு மடக்கியது வனத்துறை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜாவை, நேற்றிரவு மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர்.

 

பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாரி பாளையம், பருத்தியூர், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களை, அரிசிராஜன் என்ற காட்டு யானை சேதப்படுத்தி வந்தது. இதற்கு அரிசி மிகவும் பிடிக்கும் என்பதால் தான், அரிசி ராஜன் என்று அழைக்கப்படுகிறது.

 

விளை நிலங்களை சேதப்படுத்தி,மக்களை பீதிக்குள்ளாக்கி வந்த அரிசி ராஜாவை பிடிக்க வனத்துறையினர் பெரும்பாடு பட்டனர். டாப்சிலிப் பகுதியில் வனத்துறையினர் 70க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

 

இந்த நிலையில் அர்த்தனாரிபாளையம்வனப்பகுதியில் பாறை அருகில் நின்றிருந்த யானையை, நேற்றிரவு மயக்க ஊசி வனத்துறையினர் செலுத்தி பிடித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.


Leave a Reply