கோவை அருகே, ரயில் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை இருகூர் அருகே ராவுத்தர் பாலம் பகுதியில் நள்ளிரவில் இந்த விபத்து நடந்ததாக, முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிவின்றன.
சூலூர் அடுத்த இருகூர் அருகே ராவுத்தர் பாளையம் பகுதியில் அந்த வழியாக வந்த ஆழப்புழா -சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவத்தில் மாணவர்கள் 4 பேரும் பலியாயினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரயில் மோதி உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் உடலை போத்தனூர் போலீசார் மீட்டுள்ளனர். பலியான மாணவர்கள் கொடைக்கானல் சித்திக் ராஜா, நிலக்கோட்டை ராஜசேகர், ராஜபாளையம் கவுதம், கருப்பசாமி என தெரிகிறது.
இறந்த மாணவர்களின் உடலை கைப்பற்றி போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.