50 லட்சம் போலி கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்

நடப்பாண்டில் மட்டும் பேஸ்புக் சுமார் 50 லட்சத்து 40 ஆயிரம் போலி கணக்குகளை நீக்கியுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று இந்த நடவடிக்கையை பேஸ்புக் மேற்கொண்டுள்ளது.

 

இதில் 50 ஆயிரத்து 741 புகார்கள் அமெரிக்காவிடம் இருந்து வந்ததாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும் தவறான தகவல்களையும், வெறுப்பை பரப்பும் விதமாகவும் பதிவு வெளியிட்ட 50 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

 

யார் இந்த போலி கணக்குகளை உருவாக்கினர்? எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் கூறியிருக்கிறது.


Leave a Reply