10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி ! ஆனால் விண்ணை தொடும் சாதனை!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து தேர்வுகளிலும் தோல்வியுற்ற 17 வயது சிறுவன் 35 இலகுரக விமானம் மாதிரியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள பிரின்ஸ் பஞ்சல் என்ற மாணவன் பத்தாம் வகுப்பில் ஆறு பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளார்.

 

ஆனால் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கக்கூடிய 35 மாதிரிகளில் இலகுரக விமானங்களை உருவாக்கியுள்ளான். இந்த மாதிரிகளை பேனர்கள் உருவாக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களிலிருந்து தயாரித்துள்ளார்.

 

முதலில் தான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்துவது தனக்கு மிகவும் கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள பிரின்ஸ் திறமை என்பது சான்றிதழ்களில் மட்டும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.


Leave a Reply