பல ஆண்களோடு நெறிகெட்ட வாழ்க்கை! பெண் தீ வைத்து எரித்து கொலை!

கணவரை பிரிந்து பல ஆண்களோடு நெறிகெட்ட வாழ்க்கை வாழ்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கோர முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. விவாகரத்தான பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் அவரை பிரிந்து சென்று வேறு ஒரு நபருடன் வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில்தான் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்தப் பெண் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரை கொலை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் பல்லடத்த்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

 

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெருமாள் கவிதாவை 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து கவிதாவுக்கு தூத்துக்குடியை சேர்ந்த எட்வின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கவிதாவை தூத்துக்குடிக்கு அழைத்து வந்த எட்வின் குமரன் நகர் பகுதியில் வீடு எடுத்து குடி வைத்துள்ளார்.

 

கவிதா முத்தையா புரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். எட்வின் அங்குள்ள ஐஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் கவிதா கடந்த 8-ம் தேதி திடீரென மாயமாகியுள்ளார். எட்வின் அவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில் விவேகானந்தா நகரில் உள்ள ஒரு வீட்டில் கவிதா ஆட்டோ ஓட்டுனர் ஒருவருடன் தங்கியிருக்கும் விவகாரம் தெரிய வந்துள்ளது.

அந்த வீட்டிற்கு எட்வின் சென்று பார்த்தபோது கவிதா தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது கவிதா தனது இரண்டாவது கணவர் எட்வினை பிரிந்து ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி என்பவருடன் சேர்ந்து குடித்தனம் நடத்தி வந்தது தெரியவந்தது.

 

எட்வினுடன் குடும்பம் நடத்தி வந்த கவிதாவுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தனது செல்போன் எண்களை ஆண் நண்பரிடம் பரிமாறிக்கொண்ட கவிதா நேரம் காலம் பார்க்காமல் அடிக்கடி அவர்களுடன் பேசி வந்துள்ளார். இது எட்வினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கவிதாவிடம் கேள்வி எழுப்பியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

எட்வின் கவிதாவை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா தனது ஆண் நண்பர் ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி என்பவருடன் சென்றுள்ளார். கருப்பசாமி விவேகானந்தா நகரில் வீடு எடுத்து கவிதாவை குடி வைத்துள்ளார். இவரும் அங்கு வசித்து வந்துள்ளார். கவிதா மூன்றாவதாக கருப்பசாமியுடன் குடும்பம் நடத்தி வந்தாலும் கவிதாவிற்கு ஆண் நண்பர்களிடமிருந்து வரும் செல்போன் அழைப்புகள் குறையவில்லை என கூறப்படுகிறது.

 

கவிதாவுக்கு வரும் தொடர்ச்சியான செல்போன் அழைப்புகளால் கருப்பசாமியும் எரிச்சல் அடைந்துள்ளார். போன் செய்பவர்கள் யார் என கருப்பசாமி விசாரித்தபோது அண்ணன், தம்பி என உறவு முறைகளைக் கூறி விளக்கம் அளித்துள்ளார் கவிதா. ஆத்திரமடைந்த கருப்பசாமி விறகு கட்டையால் கவிதாவின் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். கவிதா பத்துக்கும் மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply