பரோலில் வந்துள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்றார்

ஒரு மாத கால பரோலில் வந்துள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்றார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இதனிடைய அவருக்கு பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நிலை மோசமடைந்து உள்ளதால் அவரை காணவும், அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் பரோல் கேட்கப்பட்டது.

 

இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. இதனையடுத்து புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து வேலூர் மத்திய சிறையில் ஆஜர்படுத்தப்பட்ட பேரறிவாளன் பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டை அழைத்துச் செல்லப்பட்டார்.

 

பேரறிவாளன் அவரது வீட்டிலேயே தங்க உள்ளநிலையில் வீட்டை சுற்றி போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பின்னர் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.


Leave a Reply