மாற்றுதிறனாளியின் கால் விரல்களை குலுக்கிய முதல்வர்- ஏன் இப்படி செய்தார் தெரியுமா?

தம்மை நேரில் சந்தித்த, கையில்லாத மாற்றுதிறனாளி இளைஞரின் கால் விரல்களை பிடித்து குலுக்கி வரவேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது; இப்புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

கேரள மாநிலம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான பிரணவ், முதல்வரின் பொது நிவாரண திட்டத்திற்கு நிதி வழங்க விரும்பினார். இதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்துக்கு சென்றிருந்தார். அங்கு முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, தனக்கு டிவி நிகழ்ச்சி ஒன்றில் கிடைத்த தொகையை, முதல்வரின் பேரிடர் நிவாரண தொகைக்கு அளித்தார்.

 

அவரது இந்த செயல், முதல்வர் பினராயி விஜயனை நெகிழச் செய்தது. தம்மை சந்திக்க வந்த பிரணவிற்கு கைகள் இல்லாத நிலையில், அவரது கால்களை பிடித்து, கை குலுக்குவது போல், முதல்வர் குலுக்கினார். அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு, அந்த இளைஞரின் கால் விரல் உதவியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

 

இந்த சந்திப்பு தம்மை மிகவும் நெகிழச் செய்துவிட்டதாக, சமூக வலைதளத்தில் முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார். இப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Leave a Reply