கீழக்கரை டாஸ்மாக் கடை முன் நேற்று வரை குடிமகன்கள்: இன்று முதல் குடிமக்கள் கொண்டாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இதை அப்பகுதி மக்கள் அப்புறப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தனர்.

 

இந்நிலையில் நாம் தமிழர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ., வீரகுல தமிழர் படை, கம்யூனிஸ்ட்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் உத்தரவில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டன.

 

இதையடுத்து டாஸ்டாக் கடைகள் இருந்த இடத்தில் திமுக மாணவரனி செயலாளர் ஹமீது சுல்தான் தலைமையில் பொதுமக்களுக்கு மோர் வழங்கினர். மஹ்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுந்தரம், மக்கள் டீம் காதர், கெஜி, அஜ்மல் கான், நயினார் அய்யா, தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் எஸ்.கே.வி.சுபைபு, எபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply