ஜல்லிக்கட்டுக்கு பிரதமர் மோடியை அழைத்து வருவோம் : ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் வெற்றிடம் என்ற விமர்சனங்கள் தமிழக முதலமைச்சர் பழனிசாமியை நோக்கி வெற்றிடமாக மாறியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் உயர்ந்ததற்கு முதலமைச்சரின் குடிமராமத்து பணியே காரணம் என குறிப்பிட்டார்.

 

முதல்வர் அனுமதி அளித்தால் பிரதமர் மோடியை அழைத்து வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்திக் காட்டுவோம் என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறினார்.


Leave a Reply