டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்? விரைவில் அறிவிப்பு வெளியிடுகிறது ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, வரும் டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கி, டிசம்பர் 24ஆம் தேதிக்குள் முடிந்துவிடும்; அதன் பிறகு தேர்தல் நடத்துவது ஏதுவாக இருக்கும் என்று கருதி, இத்தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

மாநில தேர்தல் ஆணையர் – முதல்வர் அண்மையில் நடத்திய ஆலோசனையின்முடிவில், டிசம்பர் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஆணைய வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகி உள்ளது.


Leave a Reply