உட்கட்சி பூசலால் தான் 2 தொகுதிகளை திமுக இழந்ததா?

இடைத் தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. உட்கட்சி பூசலால் தான் 2 தொகுதிகளை திமுக இழந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

திமுக தலைவர் ஸ்டாலின் வார்த்தைகள் அந்த கட்சிக்குள் நடந்து கொண்டிருந்த பூசலை வெட்டவெளிச்சமாகி இருக்கின்றது. கோஷ்டி பூசல் மூலம் கட்சி பலவீனமாக நினைக்காதீர்கள் என்ற வார்த்தை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. கோஷ்டிப் பூசலால் தான் திமுக தோல்வியடைந்தது என்ற குரல்கள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளது தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

 

நாடாளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றி 22 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி என பயணித்துக்கொண்டிருந்த திமுகவிற்கு, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்கள் மிகப்பெரிய சறுக்கலை அளித்துள்ளது. இரண்டு தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

 

அந்த கட்சியினர் இடையே மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் தான் திமுக பொதுக்குழுவில் எதிரொலித்துள்ளது. இடைத் தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர் அந்த இரண்டு தொகுதிகளை சேர்ந்தவர்கள்.

 

திமுகவை காப்பாற்றுங்கள் என்று குரல் பகிரங்கமாகவே ஒலித்தது. இந்த குரல்களை எல்லாம் உன்னிப்பாக கேட்ட பின்னரே நிர்வாகிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்டாலின்.


Leave a Reply