அழகப்பா பல்கலை., செஸ் போட்டி உச்சிப்புளி எம் ஜிஆர் கலை கல்லூரி மாணவி முதலிடம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் கல்வி நல அறக்கட்டளையின் உறுப்பு கல்லூரியான , உச்சிப்புளி புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் கலை, அறிவியல் பெண்கள் கல்லூரி பி.ஏ. வணிகவியல் (சி.ஏ) இரண்டாம் ஆண்டு மாணவி ஏஞ்சலின் பிரிட்டா முதலிடம் பிடித்தார்.

 

காரைக்குடி அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஜெனிபர், காரைக்குடி உமையாள் ராமநாதன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி லட்சுமி ஆகியோர் 2 ஆம் இடம் பிடித்தனர்.
முதலிடம் பிடித்த மாணவி ஏஞ்சலின் பிரிட்டாவை , கல்லூரி தாளாளர் நாசர் அலி, முதல்வர் நிர்மலா தேவி, பி.எட்., கல்லூரி முதல்வர் முத்து, அலுவலக நிர்வாகிகள் நாகராஜன்,இராஜேந்தரன் மற்றும் பேராசிரியைகள் பாராட்டினர்.


Leave a Reply