தமிழகத்தைச் சேர்ந்த பாதுகாவலரை தாக்கும் வீடியோ காட்சிகள்

சென்னை அருகே ஐடி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பாதுகாவலரை பீகாரை சேர்ந்த இருவர் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. காரப்பாக்கத்திலுள்ள ஐ‌டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாவலரை உடன் பணிபுரியும் பாதுகாவலர்கள் பெரிய கம்பு கொண்டு தாக்கியுள்ளனர்.

 

இதனை அங்கிருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Leave a Reply