இரவு நேரங்களில் சாலையில் புலி நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்

நீலகிரி மாவட்டம் பாட்டவயல் சாலையில் புலி நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள பாட்டவயல் பகுதியிலிருந்து வயநாடு மாவட்டத்திற்கு செல்லும் சாலையில் நேற்று இரவு புலி நடமாட்டம் இருந்துள்ளது.

 

இதனை அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். புலி நடமாட்டம் இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Leave a Reply