ஜேப்பியார் கல்விக் குழுமத்தில் வருமானவரி சோதனை

தமிழகம் முழுவதும் ஜேப்பியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமான முப்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணாநகர் ஜெ-பிளாக்கில் உள்ள வீடு ,சூளைமேட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள கல்லூரி மற்றும் வீடு உட்பட சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

 

வரு ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தங்களது ஊழியர்களின் வங்கி கணக்கில் கருப்பு பணத்தை முதலீடு செய்த புகாரின் பேரில் ஜேப்பியார் குழுமத்தில் சோதனை நடத்தப்பட்டு 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வரி ஏய்ப்பு புகாரின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஒரு பகுதியிலுள்ள ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான மீன்பிடி துறைமுகத்தில் சோதனை செய்ய வந்த ஆறு வருமான வரித்துறை அதிகாரிகளை துறைமுக ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply