வெங்காய விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் வெங்காயம் கிலோ நூறு ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் உயர்ந்து வருகின்றன.

இந்நிலையில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் தலைமை செயலகத்தின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறிகளை மாலையாக அணிந்தபடி ஆர்ப்பாட்டம் செய்த காங்கிரஸ் கட்சியினர் வெங்காய விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.






